
குற்றாலத்தில் சீசனே ஆரம்பிக்கல…அதுக்குள்ள சாரல் திருவிழாவாம்? என்றுதான் ஆச்சரியத்துடன் வாய் பிளக்கிறார்கள் இந்தச் செய்தியைக் கேட்கும் உள்ளூர் மக்கள்!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சாரல் சீசன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் 2019 சாரல் திருவிழா ஜூலை மாத இறுதி வாரத்தில் தொடங்குதல் குறித்த முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், சுற்றுலா அலுவலர் சீதாராமன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் குற்றாலத்தில் இன்னும் இந்த வருடம் சீசன் சரியாகத் தொடங்கவில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள். எப்போதும் நன்றாக இருக்கும் சீஸன், அரசு சாரல் திருவிழா நடத்தும் போது பயந்து போய், குற்றாலத்தை விட்டே ஓடிவிடும்; இந்த வருடம் அதற்காகவே இன்னும் வரவே இல்லையோ என்று நகைச்சுவையாகக் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment