
தமிழகத்தில் லாட்டரிக்குத் தடை விதித்தாலும், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டி, வி.வி.ஐ.பி-யாக வலம் வந்து கொண்டிருக்கிறார், லாட்டரி மார்ட்டின். லாட்டரி தொழில் மட்டுமல்லாமல் ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் அண்டு கோ அனைத்து துறைகளிலும் வலம் வந்துகொண்டிருக்கிறது. மார்ட்டின் குடும்பத்தினருக்கு அரசியல் தொடர்பும் அதிகம்.
லாட்டரி மார்ட்டின் வீடு
இதனால், வருமானவரித்துறை, சிபிஐ ரெய்டில் மார்ட்டின் சிக்குவது வழக்கம். கடந்த ஏப்ரல், மே மாதங்களில்கூட, நாடு முழுவதும் மார்ட்டின் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
`சிக்கிம் லாட்டரி சட்டப் பிரிவுகளை மதிக்காமல், மார்ட்டின் நிறுவனம் சிக்கிம் அரசை ஏமாற்றியுள்ளது. 1-4-2009 முதல் 31-8- 2010 -ம் ஆண்டு வரை, பரிசுப் பொருள்கள் விற்றதன்மூலம் சட்ட விரோதமாக ரூ.910.3 கோடியை மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனங்கள் வருவாயாகப் பெற்றுள்ளன. அந்தப் பணத்தை, 40 கம்பெனிகளில் அசையா சொத்தாக முதலீடுசெய்திருந்தது.
அமலாக்கத்துறை செய்தி குறிப்பு
இதற்காக, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் ஹோட்டல் நிறுவனத்தின்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து, 61 வீடுகள், கட்டடங்கள், 85 காலி மனைகள் என்று ரூ.119.60 மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன" என்று அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது
Dailyhunt
No comments:
Post a Comment