
வேலூர்: வேலூரில் சதியால் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்தனர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்ய முக ஸ்டாலின் வேலூரிக்கு வருகை தந்துள்ளார். அவர் இன்று காலை நடைப்பயிற்சியின்போது கே வி குப்பம் ஆகிய பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல்
இன்னும் சிலரோ அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் லத்தேரியில் முக ஸ்டாலின் முதல் நாளாக திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் நாம் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இங்கு வாக்கு வித்தியாசத்தை பார்த்தால் 1 லட்சம் முதல் ஐந்தரை லட்சம் வரை உள்ளது.
23 தொகுதிகளில் உதயசூரியன்
வேலூர் தொகுதியுடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் 24 தொகுதிகளில் (கூட்டணி கட்சி) போட்டியிட்டோம். ஏதோ சதி செய்யப்பட்டு வேலூர் நாடாளுமந்ரத் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனால் 23 தொகுதியில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
வெற்றி
நாடாளுமன்றத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் திமுகதான் 3ஆவது இடத்தில் அமர்ந்துள்ளோம். 5, 6 நாட்களுக்கு முன்பு ஒரு கணக்கெடுப்பு நடத்தியிருக்காங்க, இந்தியாவில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதுதான் அந்த கணக்கெடுப்பு.
பழமொழி
அதில் தமிழகத்தில் திமுகதான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்ற பெருமையும் நமக்கு வந்துள்ளது. அதிமுக வேட்பாளரின் பெயரை சொல்லி நான் அவருக்கு விளம்பரத்தை தேடித் தர விரும்பவில்லை. பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று என்பது பழமொழி.
எண்ணி பாருங்கள்
அது போல்தான் பத்தோடு பதினொன்றாக போய் உட்கார போகிறார்கள். அடிமையாக, கூனி குறுகி மக்களவை, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களும் தமிழக ஆட்சியாளர்களும் இருக்கிறார்களோ அப்படிதான் இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் இருக்க முடியும் என்பதை எண்ணி பாருங்கள்.
பிரசாரத்தை
தமிழகத்தில் திமுக பெருவாரியாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நான் நன்றிக் கூறி கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் குடியாத்தம், ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தல்களிலும் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 22 தொகுதிகளில் 13 9 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து தங்களை ஆட்சியில் தக்க வைக்க மக்கள் விரும்பினார்கள் என அதிமுக பொய் பிரசாரத்தை செய்து வருகிறது.
12 தொகுதிகள் அதிமுகவினுடையது
ஆனால் நாம் வெற்றி பெற்ற 13 தொகுதிகளில் ஒன்றான திருவாரூர் தொகுதி மட்டுமே நம் தொகுதியாகும். மற்ற 12 தொகுதிகளும் அதிமுகவின் தொகுதிகள். அவற்றில் வெற்றி பெற்றதன் மூலம் 12 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து நாம் கைப்பற்றி இருக்கிறோம். 13 பெரிசா, 9 பெரிசா, 9 தானே பெரிசு. மக்களின் பிரச்சினைகளை ஏற்கெனவே 37 எம்பிக்கள் குரல் கொடுத்து வருவதை போல் 38-ஆவது எம்பியாக தேர்வாக உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்கள் என்றார் ஸ்டாலின்.
No comments:
Post a Comment