
கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்பட்டால் இடை நீக்க முடிவை தலைமை எடுக்கத் தான் செய்யும் என தமிழககாங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திபவனில் வைத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "தலைமை முடிவெடுத்த பின்னர், அந்த முடிவுக்கு எதிராக செயல்பட்டால் இடை நீக்கம் முடிவை தலைமை எடுக்கத் தான் செய்யும்.
எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் என்று யாரும் இல்லை. யாருக்கும் எதிரானவன் நான் இல்லை. அனைவரும் எனது நண்பர்கள் தான்.ப.சிதம்பரத்திற்கு துரோகம் இழைத்ததாக கராத்தே தியாகராஜன் கூறுவது சரியல்ல.
கட்சியில் உள்ள சிறு சிறு குழுக்களை ஒழிக்க வேண்டும் என்பது தான் எனது இலக்கு. அனைவரும் ஒருமித்தகருத்தோடு பயணிக்க வேண்டும். அதுவே காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கும்" என்றார்.
newstm.in
No comments:
Post a Comment