
சுவிஸ்: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது. 2018ம் ஆண்டில் இந்தியர்களில் சேமித்து வைத்த கருப்பு பணத்தின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 6% குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் வைத்துள்ள மொத்த கருப்பு பணத்தின் மதிப்பீடுகளை அந்நாட்டு மத்திய வங்கி வெளியிடும். அதன்படி இந்தியாவில் தனி நபர், நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை தளமாகி கொண்ட கிளை நிறுவனங்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ள பண மதிப்பை வெளியிட்டுள்ளது.
2018ம் ஆண்டில் இந்தியர்களில் சேமித்து வைத்த கருப்பு பணத்தின் மதிப்பு முந்தைய ஆண்டை விட 6% குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பண மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் அதாவது ரூ.6,757 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமான வெளிநாட்டினர் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
சேமிப்பாளர்களின் பெயர் விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வரும் இந்த வங்கிகளில் ஏராளமான இந்தியர்களும் கோடிக்கணக்கான பணத்தை சேமித்து வருகின்றனர். இதையடுத்து, சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் சேமித்து வரும் பாகிஸ்தானியர்களின் பணமும் 3-ல் ஒரு பங்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணமாக 744 மில்லியன் சுவிஸ் பிராங் அதாவது ரூ.5,300 கோடி என்பது தெரியவந்துள்ளது. கருப்பு பணம் பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்படும் தகவல்கள் ரகசிய விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொரு கருப்பு பண விவகாரம் பற்றிய தகவல்களையும் இந்தியா-சுவிட்சர்லாந்து அரசுகள் பகிர்ந்து வருகின்றன.
வரி விவகாரங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment