
நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதாகவும், தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 'மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தும், இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தில் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை எனில் போராட்டம் நடைபெறும்' என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment