
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் இந்த மாதம் தொடக்கத்தில் அருணாச்சல்பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. அசாமில் இருந்து கடந்த 3-ம் தேதி 13 நபர்களுடன் புறப்பட்ட விமானம் அரைமணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததை.விமானம் மாயமானதையடுத்து தேடுதல் பணி தீவிரமானது. மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 8 நாள்களுக்குப் பிறகு சியாங் மாவட்டத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து விமானப்படை வீரர்கள், மலையேற்ற வீரர்கள் உள்படப் 12பேர் கொண்ட மீட்புக்குழுவை அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாகவும் கடல்மட்டத்தில் இருந்து 12000 அடி உயரத்தில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த வீரர்கள் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்தப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவந்ததால் இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. விமானத்தில் பயணித்த 13 பேரில் உடல்களும் கடந்த 20-ம் தேதி ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் மீட்புக்குழுவினர் அந்த பகுதியில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து மழை பெய்துவந்ததால் விமானப்படை விமானம், ஹெலிகாப்டர்களால் மீட்புக்குழுவினர் இருந்த பகுதியை நெருங்கமுடியவில்லை. வேறுவழியின்றி மீட்புக்குழுவினர் அங்கே இருக்க வேண்டிய சூழல் நிலவியது.
மலைபாங்கான பகுதி என்பதால் மீட்புக்குழுவினரால் கீழே இறங்கவும் வழியில்லாமல் போனது. அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் ஹெலிகாப்டர்கள் கீழ் இறங்கினால் தான் அவர்களால் வர முடியும். மோசமான வானிலை காரணமாக அது முடியாமல் போனது. பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் மலையேற்ற வீரர்கள் என்பதால் சுழ்நிலை சமாளித்துக்கொண்டு இருந்தனர். விமானப்படை வீரர்கள் 8பேர், ராணுவ வீரர்கள் 4 பேர், உள்ளூர் மக்கள் 3 பேர் அங்கு சிக்கிக்கொண்டனர்
மீட்புக்குழுவினரை மீட்கும் முயற்சியில் விமானப்படை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சரியாக இரண்டு வாரங்கள் கழித்து அங்கிருந்தவர்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்திய விமானப்படை ட்விட்டர் பக்கத்தில், 15 பேரையும் பத்திரமான ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளோம். எல்லோரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment