திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பேருந்தில் சென்றதால் கன் மட்டும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருச்சி கண்டோன்மென்ட் கஸ்டம்ஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(45). இவர் திருச்சி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை நவல்பட்டு பூலாங்குடி காலனியில் உள்ள அவரது அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு, ராமச்சந்திரன், அவரின் மனைவி வினிதா (34) , மகள் ராஜஸ்ரீ (8) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
விழா முடிந்தபிறகு தனது மகன் ராகுலை மட்டும் பேருந்தில் அனுப்பி வைத்த ராமச்சந்திரன், பூலாங்குடி காலனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கும்பகுடி சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் அவரது மனைவி வினிதா, மகள் ராஜஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் அருகில் உள்ள மின் கம்பம் மீது மோதி நின்றது. காரில் வந்தவர் காரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் பலியானர்களின் 3 பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment