திருச்சி:
மொழிபிரச்னையால் பெரும் ரயில் விபத்து ஏற்பட இருந்த நிலையில், இனி ரயில்
பணியாளர்கள் அனைவருக்கும் புரியும் படி பொதுமொழியான ஆங்கிலத்தில் தான் பேச
வேண்டும் என ரயில்வே டிவிசனல் நிர்வாக மேலாளர்(dom) உத்தரவிட்டுள்ளார்.
மதுரை
அருகே திருமங்கலத்தில் கடந்த 3 நாட்களுக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால் ஸ்டேசன் மாஸ்டர் ஜெயக்குமார், மதுரையில் இருந்து நெல்லை நோக்கி
ரயிலை அனுப்பினார்.
வேறு ரயில்களை இந்த தடத்தில் அனுப்ப வேண்டாம் என கள்ளிக்குடி ரயில் நிலைய மாஸ்டர் சிவசிங் மீனாவிற்கு அவர் தமிழில் கூறியிருக்கிறார்.
ஒரே தண்டவாளத்தில்
இதனை
சரிவர புரிந்து கொள்ளாத மீனா, செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும்
பயணிகள் ரயிலை அனுப்பி வைத்துள்ளார்.இதனால் இரு பயணிகள் ரயில்களும் ஒரே
தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தன. இதன்காரணமாக பெரும் விபத்து ஏற்படும்
சூழல் இருந்தது.
அதிர்ச்சி
இதனிடையே
சிவசிங் மீனாவிடம் பேசியதில் சந்தேகம் இருந்ததால் ஜெயக்குமார்,
கள்ளிக்குடி கேட் கீப்பருக்கு போனில் பேசியுள்ளார். அப்போதுதான்
இருரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
தடுத்து நிறுத்தம்
இதையடுத்து
அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பரங்குன்றம் ஸ்டேசன் மாஸ்டர் மூலம் விபத்தை
தடுத்து நிறுத்தினார் . இதன்பிறகு சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர்களால்
அதிர்ஷ்டவசமாக விபத்து நிகழவில்லை.
தடுத்து நிறுத்தம்
இதையடுத்து
அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பரங்குன்றம் ஸ்டேசன் மாஸ்டர் மூலம் விபத்தை
தடுத்து நிறுத்தினார் . இதன்பிறகு சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர்களால்
அதிர்ஷ்டவசமாக விபத்து நிகழவில்லை.
தாய்மொழி வேண்டாம்
ஸ்டேசன்
மாஸ்டருக்கு தமிழ் மொழி புரியாமல் போனதே இந்த சம்பவத்திற்கு காரணம்
என்பதால், இனி ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள் உள்பட ஆப்ரேட்டிங் பணியாளர்கள்
அனைவரும் ஆங்கிலத்தை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தெற்கு
ரயில்வே பிராந்திய நிர்வாக மேலாளர் அனந்தராமன் , மதுரை, பாலாக்காடு,
திருவனந்தபுரம், சென்னை, சேலம். அனைத்து கோட்டத்திற்கும் சுற்றறிக்கை
அனுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment