சென்னை: மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு கொலைக்காரனே தவிர
தீவிரவாதி இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி
தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில்
தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல்
தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். அவரது
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் இந்த
பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இந்நிலையில் கமல்
பேச்சு குறித்து பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கருத்து
தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, கமல் கூறியப்படி கோட்சே தீவிரவாதி இல்லை.
கோட்சே ஒரு கொலைக்காரன்.
யார் தீவிரவாதி என ஐநா ஒரு வரையறை கொடுத்துள்ளது. தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் தீவிரவாதி.
கோட்சே
மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளிதான். ஐநா வரையறைப்படி கோட்சே
தீவிரவாதி இல்லை. இவ்வாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி
தெரிவித்துள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment