ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் குறைபாடுகளுடன்
தயாரிக்கப்படுவதால் அதிகளவு விபத்துகள் நிகழ்வதாக இந்திய ராணுவம்
குற்றஞ்சாட்டியுள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த 41 வெடிமருந்துகள்
தயாரிக்கும் நிறுவனங்கள்தான், இந்திய ராணுவத்திற்கு அதிகளவு வெடிமருந்துகளை
வழங்குகின்றன. இந்நிலையில் பீரங்கி, போர் விமானங்கள், துப்பாக்கி
உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் குறைபாடுகள் நிறைந்ததாக
இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய ராணுவம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் புகார் தெரிவித்துள்ளது.
அதில், ராணுவத்திற்கு பெருமளவு வெடிபொருட்கள் வழங்கும்
பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளில் குறைபாடுகள் இருப்பதாகவும்,
அதனால் விபத்துகள் ஏற்பட்டு ராணுவ வீரர்கள் காயமடைவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ கருவிகள் பழுதடைவதாகவும்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உபகரணங்களைப் பயன்படுத்த ராணுவ
வீரர்களுக்கு நம்பிக்கை இழந்துவிடுவதாகவும் இந்திய ராணுவம்
தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெடிமருந்துகள் தயாரிக்கும் பொதுத்துறை
நிறுவனங்களில் தரக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு தீவிர நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை செயலர் தெரிவித்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment