'மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான்
அவர்களுடன் பேசி வருகிறேன்' என்பதை தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது நரேந்திர
மோடியோ நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து நான் விலகத்தயார்;
நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகத் தயாரா?"
என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்குச்
சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக
ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மோடியுடனும் ஸ்டாலின் பேசி
வருகிறார். பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி
வருகிறார்' என்று 'பச்சைப் பொய்' நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத்
தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு.
ஆனால்
பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்திரராஜன்
இப்படியொரு 'பொய்' பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம்
தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். பா.ஜ.க.
மேலிடத் தலைவர்கள் தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள்.
தெலுங்கானா
முதல்வர் சந்திரசேகர் ராவ் இப்போது முதன்முதலாக என்னை வந்து
பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச்
சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே 'இது
மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து
தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக
அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை தமிழிசை சவுந்திரராஜன் வழி
மொழிந்திருக்கிறார். யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக்
கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து
தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் .
தமிழிசை
சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று
ஆசைப்படும் நரேந்திர மோடியோ 'மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி
வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்' என்பதை நிரூபித்து விட்டால்
அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும்
நிரூபிக்கத் தவறினால் திரு நரேந்திர மோடியும், மாநில பா.ஜ.க. தலைவராக
இருக்கும் திருமதி தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment