சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தமிழகத்தில் மும்முரமாகி உள்ளது.
மக்களவைத்
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள
நிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
நடைபெறுகிறது.
சென்னை
மாநகராட்சி அம்மா மாளிகையில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி முகாமில்
தமிழக முழுவதும் உள்ள தொகுதிகளின் வாக்கு எணிக்கை பொறுப்பாளர்கள் மற்றும்
தேர்தல் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தலில் வாக்குப்பதிவு
இயந்திரங்களுடன் வி.வி.பேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு
எண்ணிக்கையுடன் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை
எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் பணியாளர்களுக்கு
அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கூடுதல்
தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி, இணைத் தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும்
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சியளித்து
வருகின்றனர். நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி,
வாக்கு எண்ணிக்கையை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும் தெரிந்தோ
தெரியாமலோ தவறு நடந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment