டெல்லி: ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ்
பெற்று இருக்கிறார்.
ரபேல் ஊழல் தொடர்பான விசாரணையில் அனைத்து கட்ட
விசாரணைகளும் முடிவடைந்துள்ளது. இந்த வழக்கு மீதான டிசம்பர் மாத தீர்ப்பு
மத்திய அரசுக்கு ஆதரவாக வந்தது. இதற்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீதான
விசாரணை கடந்த 4 மாதங்களாக நடந்தது.
இந்த
நிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. ரபேல் வழக்கு நடந்த போது ரிலையன்ஸ்
நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
எப்படி
பார்ட்னர்
பார்ட்னர்
இந்த ரபேல் ஒப்பந்தத்தில்
ஆப்செட் பார்ட்னராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம்
சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக ராகுல்
குற்றஞ்சாட்டி இருந்தார். அதன்படி, அனில் அம்பானிக்கு மோடி 30,000 கோடி
ரூபாயை கொடுத்துவிட்டார்.
வழக்கு
வழக்கு தொடுத்தார்
வழக்கு தொடுத்தார்
இதில்
மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு எதிராக அனில் அம்பானி சென்ற மாதம்தான் முதல்முறை பேசினார்.
ராகுலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அனில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு எதிரான அனில் அம்பானி சார்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.
காங்கிரஸ்
காங்கிரஸ் அவமதிப்பு
காங்கிரஸ் அவமதிப்பு
காங்கிரஸ்
மீது அவமதிப்பு வழக்கு தொடுத்து 5000 கோடி ரூபாய் கேட்டு இருந்தார். பாஜக
கட்சியும் இந்த வழக்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. இந்த நிலையில்
திடீர் திருப்பமாக ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ்
பெற இருக்கிறார். நீதிமன்ற விடுமுறை முடிந்த பின் வழக்கு வாபஸ் பெறப்படும்.
இதற்கான கடிதம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
ஏன்என்ன காரணம்
இது
பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் இரண்டு
நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அனில் அம்பானி இப்படி ஒரு முடிவு எடுத்து
இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. தேசிய அரசியலில் இந்த வழக்கு
வாபஸ் பெறப்பட்டது பெரிய விவாதத்தை எழுப்பி உள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment