திருச்சிமணப்பாறை அருகே சாலை வசதியின்றி திண்டாடிய மக்கள் ஒன்று
சேர்ந்து நிதி திரட்டி அவர்களேசாலை அமைத்து கொண்டசம்பவம்பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி 3 வது
வார்டில் உள்ள சங்கமரெட்டியபட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட
குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு
போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து
நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும்
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை
வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.இது
தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும் அடிப்படை வசதிகள்
செய்து தர நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
நீண்ட நாள் கோரிக்கையையடுத்துசெவலூரில் இருந்து சுமார்100
மீட்டர் தூரத்திற்கு மட்டும் சாலை அமைத்துத்தர பணிகள் மேற்கொள்ளப்பட்ட
நிலையில் அதுவும் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
இதனால்
ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி சாலை அமைக்க செலவாகும்
தொகையினை அனைவரும் பங்கிட்டு தங்களால் இயன்ற தொகையினை தருவது என முடிவு
செய்தனர். அதன்படி ரூ.2 லட்சம் பிரிந்தது. அதை வைத்துசாலை அமைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற சாலை
அமைக்கும் பணியில் ஆண், பெண் என அனைத்து பொதுமக்களும் மண்வெட்டிசாலையை
ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறுவர், சிறுமியரும் தங்கள்
பங்கிற்கு சாலையில் உள்ள கற்களை அப்புறப்படுத்தி சாலை அமைக்கும் பணிக்கு
உதவினர்.
அவர்
செய்வார், இவர் செய்வார் என இதுவரை நம்பி இருந்த நிலையில் சாலை அமைத்துத்
தருவார்கள் என்ற நம்பிக்கை கனவு தகர்ந்ததால் நகராட்சி நிர்வாகத்தை இனியும்
நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பொதுமக்கள் தாங்களே ஒன்று
சேர்ந்து ரூ 2 லட்சம் செலவில் சாலை அமைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment