
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை தேர்வுகள்
நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நாடு
முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதன்காரணமாக பெரும்பாலான
பள்ளிகளுக்கு ஏப்ரல் 10 தேதியுடன் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 3ஆம் தேதி கோடை விடுமுறை
முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம்
அறிவித்துள்ளது.
பள்ளி திறந்த முதல்
நாள் அன்றே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிகள் பெரும் பள்ளிகளில்
விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும் என்றும்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம்
அறிவுறுத்தியுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment