
டெல்லி: ஈவிஎம் மோசடியை தடுக்க டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை
ந்தித்த 22 எதிர்க்கட்சிகள், எண்ணப்படும் விவிபாட் சீட்டுகள் வாக்கு
எண்ணிக்கையுடன் ஒத்துப்போகாவிட்டால் அந்த தொகுதியில் அனைத்து விவிவாட்
வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
மக்களவை
தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7
கட்டங்களாக நடந்தது.இதில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குப்பதிவு இயந்திரம்
முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள்
குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் இன்று தலைமை தேர்தல்
ஆணையரை சந்தித்து முறையிட 21 எதிர் கட்சிகளின் தலைவர்களும் முடிவு
செய்துள்ளனர்.
இன்னும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு
நடைபெற உள்ளது. இந்த சூழலில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் தெலுங்கு தேசம்
தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று டெல்லியில் ஒன்று கூடி தேர்தல்
ஆணையத்திடம் முறையிடுவது தொடர்பாக விவாதித்தனர்
இந்த கூட்டத்தில்
காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், அபிஷேங் மனுசிங்வி, அகமது படேல்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராரம் யெச்சூரி, மற்றும் பகுஜன்
சமாஜ் தலைவர்கள், திமுக சார்பில் கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.
21
எதிர்க்கட்சி தலைவர்கள் குழு டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை இன்று
சந்தித்தனர். அப்போது அவர்கள் மே23ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடர்பான
கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் முன்பு விவிபாட் இணைக்கப்பட
வேண்டும். ஒருவேளை வாக்கு எண்ணிக்கையும், எண்ணப்படும் ஒரு விவிபாட் வாக்கு
ஒப்புகை சீட்டு எண்ணிக்கையும் பொருத்தமாக இல்லை என்றால், அந்த தொகுதியில்
உள்ள அனைத்து விவிபாட்டுகளில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என
தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளன.
No comments:
Post a Comment