டெல்லி:
22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெல்ல
வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்துக்
கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபை
தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக லோக்சபா தேர்தலின்போதே வாக்குப்பதிவு நடைபெற்று
முடிந்தது. இது ஒரு மினி சட்டசபை தேர்தல் என்றே வர்ணிக்கப்பட்டது.
இந்த
இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாழ்வா சாவா என்பதை போன்ற தேர்தல் என்பதால்
இதன் ரிசல்ட் பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. எனவே இதன் முடிவுகள்
மீது மக்களுக்கு இயல்பாகவே ஆர்வமும் அதிகமாக இருந்தது.
14 தொகுதிகள்
இந்த
நிலையில்தான், தமிழகத்தில் 22 தொகுதிகள் இடைத் தேர்தலில் யாருக்கு வெற்றி
என்ற பெயரில் நடத்தப்பட்ட, இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு
நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில், 14
தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு 3
இந்த
கருத்துக் கணிப்பில், அதிமுகவுக்கு வெறும் 3 தொகுதிகள்தான் கிடைக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கணிக்க
முடியாத அளவுக்கு கடும் போட்டி இருப்பதாக கூறுகிறது இந்த எக்ஸிட் போல்.
கடும் போட்டி நிலவுவதாக கூறப்படும் 5 தொகுதிகளில், டிடிவி தினகரனின் அம்மா
மக்கள் முன்னேற்றக் கழகம், வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பது தெரியவில்லை.
அதுபற்றி இந்த எக்ஸிட் போல் விளக்கம் அளிக்கவில்லை.
அரசுக்கு ஆபத்து
இதனிடையே
இந்த கருத்துக் கணிப்பு உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதிமுக அரசு கவிழ
வாய்ப்புள்ளது என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் குறைந்தது 10
தொகுதிகளிலாவது வென்றால்தான், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நடுவேயும்,
ஆட்சியை தொடர முடியும் என்ற நிலையில்தான் அதிமுக உள்ளது.
மெஜாரிட்டிக்கு தேவை இந்த நம்பர்
திமுக
கூட்டணிக்கு 97 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. 21 சட்டசபை தொகுதிகளில் திமுக
வெற்றி பெற்றால், இயல்பாகவே 118 சீட்களுடன் மெஜாரிட்டி பலத்தோடு திமுக
ஆட்சியை பிடித்துவிடும். எனவே, 14 தொகுதிகளில் வெல்வது திமுகவுக்கும்
பெரும் திருப்தி தராது என்றே தெரிகிறது. திமுக நிர்வாகி சரவணன், அளித்துள்ள
பேட்டியில், தமிழகத்தின் 38 லோக்சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்
என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் பார்த்தால், 22
சட்டசபை தொகுதிகளிலும் நாங்களே வெல்வோம் என்றார்.
அதிமுக எதிர்ப்பு
இந்தியா
டுடே இன்று வெளியிட்டுள்ள இந்த சர்வேதான், 22 தொகுதிகள் தொடர்பான முதலாவது
எக்ஸிட் போல் என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே, இந்த எக்ஸிட் போல்
முடிவுகளை, அதிமுகவின் கோவை சத்யன், ஏற்க மறுத்துள்ளார். எல்லா எக்ஸிட்
போல்களிலும் திமுகவே, வெல்லும், என்றுதான் சொல்லி வந்துள்ளனர். ஆனால்
நிஜத்தில் அதிமுகவே தொடர்ந்து வென்று வந்துள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment