தூத்துக்குடி: பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து,
பாஜக மாநிலத் தலைவர், தமிழிசை தெரிவித்த கருத்துக்கான ஆதாரம் உள்ளதாகவும்,
அதை உரிய நேரத்தில் அவர் வெளியிடுவார் எனவும், அமைச்சர் கடம்பூர் ராஜு
கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறேன் என்பதை
நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், நிரூபிக்க தவறினால்
பிரதமர் நரேந்திரமோடியும், தமிழிசையும் அரசியலில் இருந்து விலக தயாரா?
எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
கலைஞரின் மகன் அதிக
நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை என்று பாஜக
மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார்.
இந்தநிலையில்,
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை
ஆதரித்து, வர்த்தக ரெட்டிபட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ
பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழிசை தெரிவித்த கருத்துக்கான
ஆதாரம் உள்ளதாகவும், அதை உரிய நேரத்தில் அவர் வெளியிடுவார் என்றார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான், ஓட்டபிடாரம் தொகுதியில்,
அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மணிமண்டபம் மற்றும் சிலை
அமைக்கப்பட்டது எனவும், தற்போது சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்
அமைக்கப்பட்டு வருகிறது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
source: oneindia.com
No comments:
Post a Comment