சென்னை: தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும் கோட்சேவை இந்து
தீவிரவாதி என கூறி பிரிவினை கருத்தை கூற வேண்டாம் என கமலுக்கு தமிழக பாஜக
தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை விமான
நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "பிரதமர் மோடியுடன்
ஸ்டாலின் பேசிதற்கான ஆதாரத்தை எப்போது கொடுக்க வேண்டுமோ? அப்போது
கொடுப்பேன்.
திராவிட முன்னேற்ற கழகம்
எப்போதும் நிறம் மாறக்கூடிய கட்சிதான் . முதலில் ராகுல் காந்தியை
முன்னிறுத்தினார்கள். அதற்கு பிறகு சந்திரசேகர் ராவை பார்க்கிறார். நீங்கள்
(செய்தியாளர்கள்) என்னிடம் இவ்வளவு வற்புறுத்தி பேட்டிக்கு
கூப்பிட்டீர்கள் அல்லவா?
இதே மாதிரி ஸ்டாலினை கூப்பிட்டு என்ன பேசினார்கள் என்பதை
கேட்டீர்களா? மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று சொல்கிறார்கள்.
மரியாதை நிமர்த்த சந்திப்பு
நாயுடுவை பாப்பாங்க
நாயுடுவை பாப்பாங்க
ஏற்கனவே
விஜயகாந்தை சந்தித்து கூட்டணி பேசிவிட்டு மரியாதை நிமர்த்தமான சந்திப்பு
என சொல்லிவிட்டுபோனார்கள். மரியாதை நிமர்த்தமான சந்திப்பு என அவர்கள்
வேண்டுமானால் அப்படி ஒரு பெயர் வைத்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு
சந்திரசேகர் ராவை மரியாதை நிமர்த்தமாக பார்த்துவிட்டு, அங்கபோய் (ஆந்திரா
போய்) சந்திரபாபு நாயுடுவை பார்ப்பாங்க.
சொல்ல முடியவில்லை
ராகுல் பிரதமர்
ராகுல் பிரதமர்
எனவே
ராகுல் தான் பிரதமர் என ஸ்டாலினால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
சொல்லவில்லை. எனவே திமுகவுக்கு மூன்று முகங்கள் இருக்கிறது என்பது எனது
கருத்து. நாங்கள் அதிமுகவுடன் தெளிவாக கூட்டணி வைத்துள்ளோம். எங்களுக்குள்
அந்த மாதிரி எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.
என்ன சம்பந்தம்
கமலுக்கு கேள்வி
கமலுக்கு கேள்வி
கமலின்
கருத்தை சுட்டிக்காட்டி தீவிரவாதம் குறித்த செய்தியாளர் கேட்டகேள்விக்கு
பதில் அளித்த தமிழிசை, "தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்.
ஒவ்வொன்றுக்கும் ஏற்றி ஏற்றி கொண்டுபோனால் அதுதவறான காரியம். இஸ்லாமிய
தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறோம். ஏனெனில் இஸ்லாமியர்கள்
எல்லோரும் தீவிரவாதிகள் கிடையாது.
இலங்கை குண்டுவெடிப்பு
கோட்சே தீவிரவாதி
கோட்சே தீவிரவாதி
ஆனால்
இலங்கையில் பார்த்தீர்கள் என்றால் குண்டு வைத்தவர்கள், ஒரு மதத்தை
சார்ந்தவர்கள். ஆனால் அப்படி குறிப்பிடுவது இல்லை. ஆனால் கோட்சைவை மட்டும்
இந்து தீவிரவாதி என்று சொல்வது எந்த வகையில் நியாயம். எனவே
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தயவு செய்து உங்க இஸ்டத்திற்கு ஏற்றி
பேசாதீர்கள். இனி பிரிவினை வாத கருத்துக்களை பேச வேண்டாம். அதற்கு இப்போது
என்ன அவசியம் வந்துள்ளது. கோட்சே செய்தது மகாபாதக செயல்.அதற்காக அவர்
தூக்கிலடப்பட்டார். இதை எப்படி இந்து தீவிரவாதம் என்று சொல்வீர்கள்
என்பதுதான் என்னுடைய கருத்து" இவ்வாறு கூறினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment