Latest News

ரமலான் நோன்பை கைவிட்டு இரத்ததானம் செய்த இளைஞர்… இந்தியாவின் மதம் கடந்த சகோதரத்துவம்



அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் பனுல்லா அகமது 26 வயது இளைஞரான இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் லேப் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். அவரது ரூம் நண்பரான தபாஷ் பகவதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.

தபாஷ் பகவதி, தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தனது நண்பன் பானுல்லா அகமதுவிடம் சொல்ல, தனக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் தான் எனக்கூறி ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.
ஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுத்தால் அவரது உடல் நிலை பாதிக்கப்படும் என்பதால் தபாஷ் அதனை ஏற்கவில்லை. ஆனால் நிலைமையை உணர்ந்த பானுல்லா அகமது தனது நோன்பை கைவிட்டு சாப்பிட்டுவிட்டு பிடிவாதமாக மருத்துவமனைக்குச் சென்று ரத்தத்தை நோயாளிக்கு தானம் செய்தார்.

இது குறித்து பேசிய தபாஷ் பகவதி, ”பானுல்லா அகமது ரத்தம் கொடுப்பாக கூறியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் நோன்பில் இருப்பதால் அதற்கு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் அவன் பிடிவாதமாக ரத்தம் கொடுத்துவிட்டான்” என்றார்.

ரத்ததானம் செய்தது குறித்து பேசிய பானுல்லா அகமது, ”ரத்தம் வேண்டும் என்றதும் நான் கொடுக்க தயாரானேன். இது குறித்து எங்கள் மத பெரியவர்களுடன் ஆலோசித்தேன். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி உதவி செய்யக் கூறினர். மேலும் ரத்தம் கொடுத்தபின் உணவு உட்கொள்ளக் கூறியும் அறிவுரை வழங்கினர்” என தெரிவித்துள்ளார்.

பானுல்லாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த நோயாளி ராஜனின் மைத்துனர், ”நோன்பை பாதியில் விட்டுவிட்டு பானுல்லா அகமது ரத்ததானம் செய்தது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் ”அவருக்கு நாங்கள், பதில் உதவியாக எதையாவது கொடுக்க நினைத்தோம் அவர் எதையுமே வாங்கிக்கொள்ளவில்லை” என்றார்.

இந்தியாவில் மத மோதல்களை ஏற்படுத்தி அரசியல் லாபம் பார்க்க கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில், மதம் கடந்த சகோதரத்துவத்தை பரைசாற்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
Source: Hindustan Times
நன்றி : Newsu

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.