சென்னை:
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளரை
ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்து
கூறியதாவது, ''இந்த தொகுதியில் பேசுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த
தொகுதியில் தமிழ் நிற்கிறது. இந்த தொகுதியில் நிற்பது தனி பெண்மணி அல்ல.
தமிழ் அறிவு நிற்கிறது, தமிழ் ஆராய்ச்சியாளர் நிற்கிறார். அவரை வெற்றிப்
பெற செய்வது தமிழர்களின் கடமை.
ஐந்து
முறை கூட்டணி அமைந்த போதும் கலைஞர் நம்மோடு இருந்தார். ஐந்து முறையும் இந்த
கூட்டணி வெற்றி பெற்றது. இதுவரை இந்த கூட்டணி தோற்றதில்லை, வருகின்ற 2019
தேர்தலிலும் உங்களுடைய ஆதரவோடு வெற்றி பெறும்.

No comments:
Post a Comment