புதுடில்லி:விலகினார்... நீதிபதி ரமணா விலகினார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட
நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு அமர்விலிருந்து நீதிபதி ரமணா
விலகியுள்ளார்.
இதனால்,
நாளை தொடங்க இருந்த விசாரணை பாதிக்கப்படும் என்று தெரிகிறது. தலைமை
நீதிபதி மீது உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார்
அளித்தார். இதனை விசாரிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதி
பாப்டே தலைமையில், நீதிபதிகள் ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர்
அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தார்.
இப்போது அந்த
அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். இது இந்திய நீதித்துறை மற்றும்
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment