Latest News

  

கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை!

  M K Stalin pays respect to Karunanidhi Memorial for the second time in Chennai
மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வருகை புரிந்துள்ளார். அங்கு முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

நேற்றுதான் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நேற்று டி.ஆர்.பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இவர்களுடன் திமுக தொண்டர்களும் நேற்று மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வருகை புரிந்துள்ளார். இன்று ஸ்டாலினுடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, சேகர்பாபு, வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் உடன் வந்தனர்.

இவர்கள் அங்கு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், அங்கேயே அமர்ந்து சிறிது பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கேயே இவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். சுமார் 20 நிமிடம் இவர்கள் உரையாடினார்கள்.

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு தற்போதுதான் கொஞ்சம் அடங்கி உள்ளது. இன்னும் 4 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில்தான் ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது நாளாக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று இருக்கிறார்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.