
கொழும்பு: இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈஸ்டர்
அன்று இலங்கையில் 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு
நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர்
பலியானார்கள்.
இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள
கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன்
கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில்
குண்டுவெடித்து இருக்கிறது.

தாக்குதல்
தாக்குதல் என்ன
தாக்குதல் என்ன
இந்த தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை ஏற்கனேவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடர்பாக முதல்முறை
எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் தாக்குதல் நடப்பதற்கும் முதல்நாள்
இலங்கை அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மீண்டும்
மீண்டும் இலங்கை
மீண்டும் இலங்கை
இதையடுத்து தற்போது மீண்டும்
இலங்கையில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில்
மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா அரசு எச்சரிக்கை
விடுத்துள்ளது. வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க
வாய்ப்பு உள்ளது அமெரிக்கா எச்சரிக்கை.விடுத்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா என்ன
அமெரிக்கா என்ன
நாளை முதல் 28ம் தேதி வரை பொது
இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் மிகவும் பாதுகாப்பாக
இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அரசு எச்சரித்துள்ளது, இதனால் இலங்கையில்
மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தாக்குதல்கள்
அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள்
அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள்
இலங்கையில்
விரைவில் அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக
அந்நாட்டு உளவுத்துறை ஏற்கனவே இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் அதேபோல் எச்சரிக்கை விடுத்து
இருக்கிறது.
No comments:
Post a Comment