
சென்னை: போன் மூலமாகவோ, அறிக்கை மூலமாகவோ இல்லாமல்.. நேரடியாக
சென்று வீராங்கனை கோமதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் கத்தார் நாம் தமிழர்
கட்சியை சேர்ந்தவர்கள்!
ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்க
பதக்கத்தை பெற்று தந்திருக்கிறார் கோமதி மாரிமுத்து! இந்த ஆசிய தடகள
போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில்தான் நடைபெற்று வருகிறது.
இதில்
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் போட்டி தூரத்தை
2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார் கோமதி.
இதனால்
அவருக்கு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துக்களை சொல்லி
வருகிறார்கள். அந்த வகையில், கத்தாரில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் சிலர்
கோமதி மாரிமுத்துவை நேரிலேயே சந்தித்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.
இது சம்பந்தமான ட்வீட்டையும் அவர்கள்
பதிவிட்டுள்ளனர். அதில், "ஆசிய தடகள சாம்பியன் போட்டியின் பெண்களுக்கான 800
மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ள தங்கை #கோமதி
மாரிமுத்து அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் -
கத்தார் உறவுகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோமதியை வாழ்த்து சொல்லும்போது, அவருக்கு சீமான் எழுதிய புத்தகம் பரிசாக
தரப்படுகிறது. இதில் ஒருவர் கரும்பு விவசாயி சின்னம் பொறித்த டீ-ஷர்ட்டை
அணிந்துள்ளார்.
No comments:
Post a Comment