
விருதுநகர்:
விருதுநகர் சூலக்கரையில் பாலாஜி பேக்கேஜிங் இண்ட
ஸ்ட்ரீஸ் என்ற பெயரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு
வருகிறது. இந்த கம்பெனி வளாகத்தில் அட்டை ரீல்கள் இருந்தன.
அதில்
நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர்
விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள்
தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment