
கொழும்பு: தீவிரவாதத்திற்கு எதிரான பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கலாகிறது.
ஈஸ்டர்
பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல்
நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள்
உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த
குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் 450க்கும்
அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம்
தற்போது இலங்கையை உலுக்கி இருக்கிறது.
இந்த
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் அடுத்து நாளை அவசரமாக இலங்கை
நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எல்லோருக்கும் இதற்காக அவசர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று இரவே அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட இருக்கிறது.
இந்த
நிலையில் நாளை அவசரமாக அங்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கை
நாடாளுமன்றத்தில் நாளை தீவிரவாதத்திற்கு எதிரான பயங்கரவாத தடுப்புச் சட்டம்
தாக்கலாகிறது. இதில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் கொண்ட
சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த தீவிரவாத தாக்குதல் குறித்த முக்கியமான அறிவிப்பும் இந்த கூட்டத்தில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
source: oneindia.com
No comments:
Post a Comment