Latest News

கவர்ச்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை - நாராயணன் திருப்பதி விமர்சனம்!

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, இன்று நண்பகல் வெளியான நிலையில், அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து தமிழக பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து உள்ளனர்.ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும்சபரிமலைகோவிலில் கலாச்சாரம் காக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையீல் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

நீர் மேலாண்மைக்காக தனி அமைச்சகம் உருவாக்க உள்ளனர். தமிழகம் போன்ற மாநிலங்களில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.முத்ரா வங்கி கடன் திட்டம் மேலும் மேம்படுத்தப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மேலும் வலுவூட்டும் விதமாக திட்டத்தை மேம்படுத்த உள்ளோம். சிறு, குறு தொழிலாளர்கள் நலன் பெற பல்வேறு திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது" என்று கூறினார்.
பின்னர்,விவசாயிகளின் லாபம் இரட்டிப்பாக்கப்படும் என்பது தேர்தல் அறிக்கையில் மட்டுமே கூறுகின்றனர். நடைமுறையில் இல்லை என்ற எதிர் காட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "விவசாய கடன் 11 லட்சம் கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது.விலையை இரட்டிப்பாக்க கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.தற்போது அதை மேம்படுத்தி வருகிறோம்.எனவே விலை இரட்டிப்பு என்பது சாத்தியமே. தமிழகத்தில் நீர் மேலாண்மை இல்லை. தொழில் நுட்ப உதவியுடன் நீர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு" என்றார்.
தொடர்ந்து, "நீட் தேர்வை பொருத்த வரை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றால் அது சட்ட சிக்கலை தான் ஏற்படுத்தும்.

நீட் தேர்வைவிரும்பாதவர்களுக்கு, விலக்கு என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மக்களை குழப்புவதற்கே இது போன்ற அறிவிப்பை காங்கிரஸ் அறிவித்து வருகிறது. மக்களை முட்டாள்கள் என நம்பி, நீட் தேர்வை வைத்து காங்கிரஸ் கட்சி குழப்புவதாக அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட், நெடுவாசல் பிரச்சனை, ஈழ போர் உள்ளிட்ட பிரச்சனைகள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்தது.

சிறு, குறு நிறுவனங்களைப.சிதம்பரம்திட்டமிட்டே ஏமாற்றி இருப்பதாகவும்,மாநில அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் தெளிவாக கூறுகிறார்.

மதுவை குறைப்பதாக சிதம்பரம் கூறுவது தமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய ஒன்றா? காங்கிரஸ் கவர்ச்சியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஆனால், அதில் பலன் இல்லை. ஜி.டி.பி நன்றாக உள்ளது என்று சிதம்பரமே கூறுகிறார்" என்றும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.