கர்ட்டோம்:
சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு
மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது
பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு
எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள்
பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி
அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும்
அதிகரித்தது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையிலான
மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதையடுத்து போராட்டங்களை கட்டுக்குள்
வைக்க தவறியதாக அதிபர் ஒமர் அல் பஷீருக்கு கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில், சூடான் நாட்டு அதிபரான ஒமர்
அல்-பஷிரை பதவி நீக்கம் செய்து சிறைபிடித்துள்ளோம் என்று அந்நாட்டு
பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சூடான் நாட்டு
பாதுகாப்பு துறை மந்திரி அவாட் இப்னூ கூறுகையில், அதிபர் பதவியில் இருந்து
ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை சிறைபிடித்துள்ள
நாங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

No comments:
Post a Comment