புதுடெல்லி:
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது
புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள்
சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
தமிழ்ப்
புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப்
பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம்
குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம்
கணிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ராகுல்
காந்தி தனது டுவிட்டர் பதிவில், தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும், வரலாறும் செழிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment