மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து
கண்மாய்கள் மற்றும் குளங்களை தூர் வார வேண்டும் என்று மாவட்ட
ஆட்சித்தலைவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்று வியாழனன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள் மற்றும் குளங்களை தூர் வார வேண்டும்.
இதற்குத் தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கொள்முதல் செய்ய வேண்டும்.
இதுதொடர்பான விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment