கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கூறி 9
பேரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பெண்ணின் புகைப்படம்
தவறுவதாக வெளியிடப்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த
ஞாயிறு அன்று இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில்
குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும்
அதிகமானோர் பலியானார்கள். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று
சந்தேகிக்கப்பட கூடிய 9 பேரின் புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளது.
இலங்கை
அரசு தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது. இதில் 3 பெண்களின்
புகைப்படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் வெளியிடப்பட்ட மூன்று பெண்களின்
புகைப்படங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் தவறானது ஆகும். இலங்கை அரசு
வெளியிட்ட புகைப்படத்தில் நெக்லஸ் போட்டிருக்கும் பெண் அமெரிக்காவை சேர்ந்த
அமரா மஜீத் என்ற பெண் ஆவார். இவர் உலகின் முக்கியமான பெண் எழுத்தாளர்களில்
ஒருவர்.
இசுலாமிய பெண்களின் விடுதலைக்காக தொடர்ந்து பேசிவரும் சமூக
பணியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை தீவிரவாதி என்று இலங்கை
அரசு தவறாக கூறி புகைப்படம் வெளியிட்டது.ஆனால் உடனே இதற்காக மன்னிப்பு
கேட்டு அரசு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்
இதுகுறித்து அமரா மஜீத் தற்போது டிவிட் செய்துள்ளார். அவர் தனது
டிவிட்டில், இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளின்
புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் என்னுடைய
புகைப்படம் தவறாக வெளியாகி உள்ளது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இது
முழுக்க முழுக்க தவறான விஷயம். என் மீது இது தொடர்பாக எந்த விதமான தவறான
புகாரையும் மேலும் அளிக்க கூடாது. அந்த மோசமான தாக்குதலுடன் என்னை தொடர்பு
படுத்தி பேச வேண்டாம். அடுத்தமுறை இதுபோன்ற தகவல்களை வெளியிடும் போது
மிகுந்த கவனத்துடன் வெளியிடுங்கள். இது ஒரு குடும்பத்தை, ஒரு மதத்தை
பாதிக்க கூடியது, என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment