Latest News

விண்ணப்பிக்கலாம் வாங்க.. தமிழக அரசில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு..!

திருவள்ளூர், முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 

பணி அலுவலக உதவியாளர் - 48
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: கணினி இயக்குபவர் - 07
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500
பணி: இரவு நேரக் காப்பாளர் - 10
பணி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 13
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
பணி: ஓட்டுநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.19,500- 62,000
பணி: துப்புரவுப் பணியாளர் - 05
பணி: மசால்ஜி - 15
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 5000
பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 62,000

தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruvallur என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் - 637003
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment-Notification%202019-Tiruvallur_0.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2019

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.