
சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரியை அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகத்தினர் மோதுவதற்கு பாய்ந்ததால், அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச்
சென்ற சம்பவம், சென்னை அண்ணாநகரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய
சென்னை லோக்சபா தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபியை
கட்சியை சேர்ந்த தெகலான் பாகவி, பாமக வேட்பாளர் சாம் பால், திமுக வேட்பாளர்
தயாநிதி மாறன் உள்ளிட்டோர், இன்று காலை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில்
தங்களது பிரச்சாரத்தை துவங்கினர்.
அப்போது, பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்குவதற்காக அண்ணாநகர் டவர் பூங்கா உள்ளே சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகளும்,
அண்ணாநகர் காவல்துறையினரும், அனுமதியின்றி இங்கு துண்டு பிரசுரங்களை
வழங்ககூடாது என்று அறுவுறுத்தினர்.
தேர்தல்
அதிகாரிகள், பாமக வேட்பாளர் சாம் பால் மற்றும் அமமுக கூட்டணி வேட்பாளர்
தெகலான் பாகவியிடம் பிரசுரங்களை பிடுங்கி, யாரிடம் அனுமதி கேட்டு இங்கே
வந்து பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது
பாமக கட்சினர் மற்றும் அமமுகவை சேர்ந்தவர்களும் எஸ்டிபிஐ கட்சியை
சேர்ந்தவர்களும் தேர்தல் அதிகாரியை நோக்கி பாய்ந்ததால், அங்கு பரப்பரப்பு
ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் தேர்தல் அதிகாரியை இந்த கட்சியினர்,
மிரட்டவே தேர்தல் அதிகாரி பூங்காவை விட்டு வெளியேறினார். இதன்பிறகு, நீ
குட்றா பார்த்துக்கலாம்.. என கட்சிக்காரர் ஒருவர் சொல்ல மீண்டும், வாக்கிங்
சென்றவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வாக்கு சேகரிக்க சென்ற
இடத்தில் தேர்தல் அதிகாரியை மிரட்டி பாய்ந்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியது.
source: oneindia.com
No comments:
Post a Comment