Latest News

ராஜஸ்தான் எல்லையில்.. பாக்.கின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா

 Sukhoi shoots down Pak drone at Bikaner border
ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுறுவிய ஆளில்லாத விமானத்தை இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. பிகானீர் நால் பிராந்தியத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய விமானப் பாதுகாப்பு ரேடார்கள் இந்த டிரோன் ஊடுருவலை கண்டுபிடித்தன. இதையடுத்து சுகோய் 30 எம்கேஐ போர் விமானம் இந்த ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

முன்னதாக இன்று காலை பேசிய விமானப்படை தலைமைத் தளபதி பீரேந்தர் சிங் டனோவா கூறுகையில், எல்லையில் பதட்டம் தணியவில்லை. நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதுகுறித்து மேலும் விவரிக்க முடியாது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, பாகிஸ்தான் விமானப்படை தொடர்ந்து உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு விமானப்படை தலைமைத் தளபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.