தூத்துக்குடி: மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரவே மக்களவை
தேர்தலில் போட்டியிடுவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மக்கள் வெற்றி வாய்ப்பை தருவார்கள் என முழுமையாக நம்புவதாக கூறினார் .
ஆக்கபூர்வமான அரசியலையே விரும்புகிறேன், எதிர்மறை அரசியலை விரும்பவில்லை என்றும் தமிழிசை கூறினார்.
பாரதிய
ஜனதா கட்சி பாசிச பாஜக அல்ல; பாசமான பாஜக என்றும் பாஜகவின் சாதனையை சொல்லி
தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பேன் என்றும் கூறிய தமிழிசை, கனிமொழி
கருத்துக்கு மட்டுமே பதில் அளிப்பேன் என்றார்.
முன்னதாக, தமிழிசை பற்றிய கேள்விக்கு பதிலளித்த
போது, கருத்து சுதந்திரம் உள்ளதா என்பதை மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com

No comments:
Post a Comment