திருச்சி அருகே அரசு பள்ளி அமைத்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பில்
ஈடுபடப் போவதாக கிராம மக்கள்சுவரொட்டி அச்சடித்து
ஒட்டியுள்ளதால்பரபரப்புஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம்,
மணப்பாறையை அடுத்த அமயபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று
செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை
எனவும்,மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், எனவே
அரசே பள்ளியை சீரமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து
வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக
அந்த பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், பல்வேறு கோரிக்கைகளை
முன் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம்
எடுக்கப்படவில்லை.
தற்போது வரை மாணவ, மாணவிகளுக்குஅருகில் உள்ள சேவை
மையக்கட்டிடம் மற்றும் சமுதாயக் கூடத்தில் வைத்தேவகுப்புகள் நடத்தப்பட்டு
வருகின்றன.
இந்நிலையில்,
பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு பள்ளி அமைக்கப்படாததைகண்டித்து வரும்
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த பகுதி மக்கள்
அறிவித்துள்ளதோடு, அதற்கான சுவரொட்டியையும் அனைத்து இடங்களிலும்
ஒட்டியுள்ளனர்.
நாங்கள் ஜனநாயக கடமையாற்ற (வாக்களிக்க) தயாராக
இருக்கின்றோம். ஆனால் எங்களின் ஜனநாயக (பள்ளி அமைப்பது) உரிமையை தாருங்கள்
என்று கூறி உள்ளனர். இதுமட்டுமின்றி விரைவில் கறுப்புகொடி ஏற்றப்போவதாகவும்
அந்த கிராம மக்கள்தெரிவித்துள்ளனர்.
newstm.in

No comments:
Post a Comment