
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே, ஏதோ ஏப்ரலில் வெயில் கொளுத்துவதை போல
வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. அனல் காற்று வீசுவதால் மதிய வேளைகளில்
மக்களால் வெளியே நடமாடவே முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில்தான், அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இருப்பதாக மக்களுக்கு இனிமையான செய்தியை சொல்லியுள்ளது சென்னை வானிலை ஆய்வு
மையம்.
இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்: தென்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு
வாய்ப்புள்ளது.
வடக்கு உள் கர்நாடகா பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி
நிலவுவதால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பிற பகுதிகளில்
வெப்ப நிலலை உயர்ந்தே காணப்படும்.
No comments:
Post a Comment