
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான
வரித்துறை சோதனைக்கும், பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
என்றும், கிருஷ்ண பகவான் பற்றி விமர்சனம் செய்த கி.வீரமணிக்கு கண்டனம்
தெரிவிப்பதாகவும், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:
இந்தியா விண்வெளி துறையில் முன்னேறியிருக்கிறது எனபதை பிரதமர் மோடி
அறிவித்தது தேர்தல் விதிமீறல் என எதிர்கட்சிகள் சொல்லிவந்தன. ஆனால் இவ்வாறு
அறிவித்ததில் எந்தவித தேர்தல் விதிமீறலும் இல்லை, என்று, தேர்தல் ஆணையம்
தெளிவாக கூறியுள்ளது.
ஸ்டாலின் சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்த
போது பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவை மட்டமாக, தரக்குறைவாக விமர்சனம்
செய்திருக்கிறார். இவ்வாறு தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது
கண்டிக்கதக்கது. யாரை ஆதரித்து பேச வந்தாரோ அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட
ஸ்டாலின் பேசவில்லை. விவரம் தெரிந்த, படித்த நபரான ஹெ.ராஜாவை தரக்குறைவாக
பேசியதை கண்டிக்கிறேன்.
பகவான் கிருஷ்ணர் பற்றி தி.க. தலைவர்
கீ.வீரமணி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் நேரத்திலும்
கூட கீ.வீரமணி உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவோரை சாடி பேசி
வருகிறார்கள். இந்த பேச்சை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள், இவர்கள்
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதையும் மக்கள்
பார்த்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் நிச்சயம் வெற்றி பெற மாட்டார்கள்.
தூத்துக்குடி
உள்ளிட்ட மூன்று இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க
பாஜக தலைவர் அமித்ஷா வரும் 2ஆம் தேதி தமிழகம் வருகிறார். வரும் 8ஆம் தேதி
கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
ஸ்டாலினுக்கு சொந்த புத்தி இல்லாமல் போய் விட்டது, காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி எதை சொன்னாலும் அதை அப்படியே ஸ்டாலின் பேசுகிறார். கொஞ்சம்
கொஞ்சமாக ஸ்டாலின் தன் சுய புத்தியை இழந்து வருகிறார்.
மேலும் திமுக
பொருளாளர் துரை முருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கும்
பிரதமர் மோடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் இல.கணேசன்
தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹெச்.ராஜா வெளியிட்ட ட்வீட்டில்,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி கி.வீரமணி அவர்களின் அநாகரீக பேச்சு
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு தக்க எதிர்வினை ஆற்றப்படும் என்று
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment