
அதிமுக ஆட்சிக்கு அனைத்து விதத்திலும் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்று
பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலானகூட்டணியில் தேமுதிகவுக்கு 4
தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை கிரவுன் பிளாசாவில் நடைபெற்ற
இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு
கையெழுத்தானது.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான
விஜயகாந்த் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேமுதிக பொருளாளர்
பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி
உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும் கூறினார்.
மேலும், விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். மக்களிடையே இந்த கூட்டணி
பிரபலமாக உள்ளது. இது ஜெயலலிதா, விஜயகாந்த் அமைத்த வெற்றிக் கூட்டணி. 40
தொகுதிகளிலும் வென்று நாளை நமதே நாற்பதும் நமதே என்பதை நிரூபிப்போம்.
எண்களில் ஒன்றும் கிடையாது; எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது.
சட்டப்பேரவை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி
தொடரும். அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து
கொள்ளப்பட்டது.
அதிமுக - தேமுதிக கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. ஆட்சிக்கு அனைத்து
விதத்திலும் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

No comments:
Post a Comment