Latest News

மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது: விஜயசாந்தி

தெலுங்கானா உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவராகிய நடிகை விஜயசாந்தி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விஜயசாந்தி, "வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும் தான் போர். பிரதமர் மோடி சர்வாதிகாரியை போல ஆட்சி நடத்துகிறார். அவர் ஜனநாயகத்தை கொன்றுவிட்டார். அவர் எப்போது எந்த குண்டு வீசுவார் என்று மக்கள் பயத்துடனேயே இருக்கின்றனர். மக்களை விரும்புவதற்கு பதிலாக அவர்களை பயமுறுத்தும் பயங்கரவாதியாக அவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டிருந்த நிலையில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஜயசாந்திக்கு கண்டங்கள் குவிந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.