
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் சிறையில்
இருந்திருப்பார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தென்மண்டல மாநாடு தற்போது விருதுநகரில் நடந்தது. திமுக தலைவர்
ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்தது. விருதுநகரில் உள்ள பட்டம்புதூரில்
இந்த மாபெரும் மாநாடு நடந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையாக
தாக்கி பேசினார். அதிமுகவின் தற்போதையை தலைவர்களையும் தாக்கினார்.
மோடி ஜெயலலிதா
மோடிக்கு தேர்தல் என்றவுடன் ஜெயலலிதா நினைவு வந்துவிட்டது. எதோ ஜெயலலிதா
ஆட்சியை கொடுக்க போவதாக கூறுகிறார்கள். அட அட என்ன ஒரு நாடகம். இதை எல்லாம்
மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களா.

ஜெயலலிதா கொடுமை
அதிமுக மீது எங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா மீது
எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆட்சியின் போதே ஊழல் வழக்கில் சிக்கி சிறை
சென்றவர் ஜெயலலிதா. ஐஏஎஸ் சந்திலேகா மீது திராவகம் வீச செய்தவர் ஜெயலலிதா.

மோசமாக இருந்தார்
நிறைய கொடுமைகளை அவர் மக்களுக்கு செய்து இருக்கிறார். மக்கள் நல
பணியாளர்களை மொத்தமாக பணி நீக்கம் செய்தார். பல அரசியல் தலைவர்களை கைது
செய்தார். அரசு பணியாளர்களை, அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் நடவடிக்கை
எடுத்தார். இவ்வளவு கொடுமைகளை செய்த ஜெயலலிதாவை மறக்க முடியுமா.

மோடி ஏன்?
இப்போது ஜெயலலிதா இருந்திருந்தால் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஏன் மோடி வரவில்லை?. ஆனால் இப்போது
தேர்தல் என்றவுடன் வருகிறார். என்ன கொடுமை இது. என்று ஸ்டாலின்
பேசியுள்ளார்.
No comments:
Post a Comment