நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன நிலையில், தற்போது
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அவர்களுடைய வேட்பாளர்களை அறிவித்து,
அவர்களை வெற்றி பெற வைப்பதற்கான தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
திமுக
கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் களமிறங்கியுள்ள, கனிமொழியை
எதிர்த்து, பாஜகமாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட உள்ளார்.
இதனால் தமிழிசையை வெற்றி பெற வைக்க பாஜகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த பிரபல நடிகரும்
இயக்குனருமான விசு, யாருக்கு பிரச்சாரம் செய்தாலும் தமிழிசைக்கு மட்டும்
செய்ய மாட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் போது... கண்டிப்பாக பாஜகவுக்கு
ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். ஆனால் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மட்டும்
செய்ய மாட்டேன். காரணம் இந்த கட்சியில் உறுப்பினராக மாறி மூன்று ஆண்டுகள்
ஆகிறது. இது வரை ஒரு முறை கூட இந்த கட்சியின் மாநிலத் தலைவரான அவரை
சந்திக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment