திருவண்ணாமலை: ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்ட அக்ரி
கிருஷ்ணமூர்த்தியை எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளராக அறிவித்துள்ளதாக திமுக
தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் திமுக
வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்
மேற்கொண்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: 1963 ல்
திருவண்ணாமலை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி தான் 1967ல் திராவிட முன்னேற்றக்
கழகம் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. திருவண்ணாமலை
மாவட்டம் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது.
ஜெயலலிதாவால்
கைது செய்யப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அவரை அதிமுக வேட்பாளராக
அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்; 18 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும்.
அக்ரி
கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ராமதாஸ், இன்று
அவரை ஆதரிக்கிறார். தன்னை தானே கடவுள் எனக் கூறிக்கொண்டு விளம்பர
எடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. பதினைந்து வயதில் அரசியலுக்கு வந்தவன்
நான்; கொலை வழக்குக்கு அஞ்சி அரசியலுக்கு வந்தவன் அல்ல.
வறுமையை ஒழிப்பதற்கு நல்ல பல திட்டங்களை அதிமுக ஆட்சி செய்து வருகிறது
எனப் பேசியிருக்கிறார் பெரியய்யா. யாருடைய வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது?
ஒருவேளை பெரியய்யா; சின்னய்யாவின் வறுமையை ஒழித்திருக்கலாம்.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு அஞ்சி காவல்துறை வாய் மூடி மௌனமாக உள்ளது.
source: oneindia.com

No comments:
Post a Comment