Latest News

கம்முனு இருக்கணும்.. தெரியுதா... போயா... "தூ".. மறக்க முடியாத "கேப்டன்"!

 கொம்பா முளைச்சிருக்கு
செய்தியாளர்களை அவமதித்து நடந்து கொள்வது ஒன்றும் தேமுதிகவுக்கு புதிது கிடையாது. விஜயகாந்த் சிறுவர்களிடம் கூட ஃபேமஸ் ஆனதே செய்தியாளர்கள் கூட்டத்தில் நடந்து கொண்ட விதத்தினால்தான்! அதுவே விஜயகாந்த்தை ஒரு ஜோக்கர் போல பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பது வேறு விஷயம்! சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் பேட்டி என்றாலே கசக்கத்தான் செய்தது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கேள்வியை கேட்டால்கூட, அதற்கு சிடுசிடுவென இருப்பதுதான் அது. கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி தந்தார். ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டதற்கு "நீ போகும் வரை நான் பேச மாட்டேன். கம்முனு இருக்கணும். தெரியுதா? ஒழுங்கா பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கிறேன். உனக்கு கொடுக்கணும் ஒன்னும் அவசியமில்லை. நா பட்டுபட்டுனு பேசுவேன். போயா...!" என்றார் ஆவேசமாக.

கொம்பா முளைச்சிருக்கு இதற்கடுத்து 2015 ஏப்ரல் மாதம், மேகதாது சம்பந்தமாக பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். அப்போது பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கி கொண்டிருந்தார். அது சம்பந்தமாக நிருபர்கள் கேள்வி கேட்டு கொண்டே இருந்தனர். அப்போது ஒரு எரிச்சல் விஜயகாந்த் முகத்தில் வெளிப்பட்டது. "உனக்கு கொம்பா முளைச்சிருக்கு, நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே...?" என்றார். ஒரு கட்டத்தில் "உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... சொன்னதை கேக்கலைன்னா மைக்கை தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ" என்றார்.

சென்னை ஏர்போர்ட்
 
சென்னை ஏர்போர்ட் இதன்பிறகு ரொம்பவும் ஹைலைட் ஆனது 2012 அக்டோபரில் சென்னை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்தான் ஜெயலலிதா உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, "இந்தக் கேள்விகளை ஜெயலலிதாவிடம் போய் கேளு.. உன் பத்திரிகை எனக்கு சம்பளமாடா தருது, நாயி!" என்று சொல்லி அவரை அடிக்க பாய்ந்தார். "உனக்குப் பேட்டி கொடுக்கணும்கிற அவசியம் எனக்கு கிடையாது.. பட்டுப் பட்டுனு பேசிருவேன் போய்யா...." என்றார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.

வருத்தம் இல்லை
 
வருத்தம் இல்லை பத்திரிகைகாரர்களை இப்படி ஒருமையிலோ அல்லது மரியாதையின்றி பேசியதற்கோ விஜயகாந்த் இதுவரை வருத்தம்கூட தெரிவித்தது இல்லை. அப்போதே அவர் வருந்தியிருந்தால் இன்றைக்கு அந்த குடும்பத்தில் பிரேமலதா இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்.

கருணாநிதி
 
கருணாநிதி எம்ஜிஆர் ஆகட்டும் கருணாநிதி ஆகட்டும் பத்திரிகையாளர்களை கண்ணியத்துடன் நடத்தினார்கள். வயதில் எவ்வளவோ குறைந்த பத்திரிகையாளர்களைக் கண்டாலும் அவரது உடல்பலம் அனுமதித்தவரை எழுந்து நின்று வரவேற்கும் மாண்புடையவராக இருந்தார் கருணாநிதி. வயது குறைந்த இளைஞர்களாக இருந்தாலும் ஒருமையில் அழைக்காத உயர்ந்த பண்பாளராக இருந்தார். இதையெல்லாம் கட்சி நடத்துகிறோம் என்று சொல்லி கொள்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான பாடம் ஆகும்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.