Latest News

வெடித்து சிதறிய மிக் -21 விமானம்.. சாமர்த்தியமாக தப்பிய பைலட்.. ராஜஸ்தானில் பரபரப்பு!

 An Indian Air Force plane crashed in Rajasthans: The Pilot is safe
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராஜஸ்தான் அருகே பிகாநெர் என்று பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

மிக் -21 ரக விமானம் இப்படி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. தற்போது இந்திய விமானப்படை அதிகாரிகளும், போலீசாரும் அங்கு சோதனை செய்து வருகிறார்கள். விமானம் கட்டுப்பாட்டை இழந்த நொடியில் விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலம் தப்பித்தார். இதனால் அவர் உடலில் காயங்கள் எதுவுமின்று தப்பித்ததாக கூறப்படுகிறது. Also Read | மாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்! சில நாட்களுக்கு முன் பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான இரண்டு விமானங்களும் சூர்ய கிரண் பிரிவை சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.