Latest News

தூத்துக்குடியில் அதிரடியாக களமிறங்கும் கனிமொழி.. நாளை திமுக சார்பில் விருப்பமனு அளிக்கிறார்!

 DMK Rajya Sabha MP Kanimozhi will contest in Tuticorin from UPA alliance
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு எடுத்து இருக்கிறார். இதற்காக நாளை அவர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் திமுக தேர்தலுக்காக தீவிர கூட்டணி ஆலோசனை செய்து வருகிறது.

இன்னொரு பக்கம் தங்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறது. இதற்கான விருப்பமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு எடுத்து இருக்கிறார். இதற்காக நாளை அவர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. Also Read | Exclusive: பாஜகவை எதிர்க்க திமுகதான் சரியான சாய்ஸ்.. கூட்டணி வெல்லும்.. காதர் மொய்தீன் நம்பிக்கை நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ராஜ்யசபா எம்பியாக கனிமொழி இருக்கிறார். இவர் ஏற்கனேவே தூத்துக்குடியில் போட்டியிட போகிறார் என்று செய்திகள் வெளியானது. தற்போது அவர் விருப்பமனு அளிக்க போவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை இவர் தனது தொண்டர்களுடன் சென்று விருப்பமனு அளிப்பார் என்கிறார்கள். திமுக சார்பாக இன்னொரு முக்கிய உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட இன்றுதான் விருப்பமனுத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.