
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் உடலில் பல இடங்களில்
சிறிய சிறிய காயங்கள் இருந்தது டெல்லியில் நடந்த மருத்துவ
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் கடந்த வாரம் பாகிஸ்தானில்
சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21
விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார்.
அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார்.
அதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். அமைதியை கருத்தில்
கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை பாகிஸ்தான் விடுவித்தது.
சிறிய சிறிய காயம்
இந்த நிலையில் விமானி அபிநந்தன் உடலில் பல இடங்களில் சிறிய சிறிய காயங்கள்
இருந்தது மருத்துவ கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கீழ் தண்டுவட பகுதியில்
சிறிய முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இது பெரிய காயம் கிடையாது.
விமானத்தில் இருந்து விழுந்த போது இந்த காயம் ஏற்பட்டு இருக்கலாம்.
நெஞ்சு எலும்பு
அபிநந்தனின் விலா எலும்பு ஒன்றும் முறிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது
குணமாக அதிக நாட்கள் எடுக்கும் என்கிறார்கள். எம்ஆர்ஐ ஸ்கேனில் இது தெளிவாக
கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் உள்ளூர் மக்கள் தாக்கியதில் இந்த முறிவு
ஏற்பட்டு இருக்கிறது.
பக் இல்லை
அபிநந்தன் உடலில் எந்த விதமான தொழில்நுட்ப கருவிகளும் பொருத்தப்படவில்லை.
ஒட்டு கேட்கும் கருவிகள் எதுவும் இல்லை. உடலில் எந்த விதமான நோய்
காரணிகளும் செலுத்தப்படவில்லை. பக் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு
கருவிகளும் இல்லை.
மீண்டும் நடக்கும்
டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் மருத்துவமனையில் செய்யப்பட சோதனையில் இது
கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இன்னும் சில மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட
உள்ளார். திங்கள் கிழமை வரை இந்த சோதனைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment