
நரசிம்ம அவதாரம் போல... தீவிரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி தீவிர
நடவடிக்கை எடுத்துள்ளார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு
தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் அரசு திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து
கொண்டார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி
பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென் சென்னையெல்லாம் கேட்காதீங்க.. டபாய்த்த அதிமுக.. வட போச்சே
வருத்தத்தில் பாஜக!
தொடர்ந்து, விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடம் பெற்ற படத்தை
பிரதமருக்கு நினைவு பரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர்
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
வெற்றியின் தொடக்கம்
துடிப்பான பல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். நாம்
விரைவில் இருக்க இமாலய வெற்றியின் தொடக்கம் தான் இந்த நிகழ்ச்சி.
மோடி எச்சரிக்கை
நரசிம்ம அவதாரம் போல... 100க்கும் தீவிரவாதிள் மீது நடவடிக்கை எடுத்து
உள்ளார். அவரது செயல்பாடுகள்.. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு
விடுத்துள்ள எச்சரிக்கை.
துணிச்சல் நடவடிக்கை
தாய்நாட்டின் நலனுக்காக துணிச்சலாக செயல்படுபவர் பிரதமர் மோடி. பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு திட்டம்
விவசாயிகளுக்கான 6 ஆயிரம் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கான அந்த திட்டத்தை பிப்ரவரி 24ம் தேதி விவசாயிகளுக்கான
திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். அந்த திட்டங்கள் வழியாக விவசாயிகளுக்கு
நலன்கள் கிடைக்கின்றன என்று ஓ பன்னீர்செல்வம் பேசினார்.
மொழியாக்கம்
தமது உரையின் ஒவ்வொரு பகுதியை முதலில் அவர் தமிழில் வாசித்தார்.
உடனடியாக... ஆங்கிலத்திலேயே மொழியாக்கம் செய்யப்பட்ட உரையையும் ஓ.
பன்னீர்செல்வம் படித்தார்.
No comments:
Post a Comment